Home
Mobile

வெளுக்குது விற்பனை.. ரூ.9,974 பட்ஜெட்ல 5G போன்.. 5000mAh பேட்டரி.. 48MP கேமரா.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் மலிவான விலைக்கு 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கின்றன. இதில் 48 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி (TECNO Spark 30C 5G) ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் 19 சதவீத தள்ளுபடி போக ரூ.10,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.525 கூடுதல் தள்ளுபடி தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.9,974 விலைக்கு இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

வெளுக்குது விற்பனை.. ரூ.9,974 பட்ஜெட்ல 5G போன்.. 5000mAh பேட்டரி!

4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுத்துள்ளது. டிஸ்பிளேவில் டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் கொண்டுள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சாருடன் மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 4 வருடங்களுக்கும் மேல் லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது.

10 பேண்ட்களுக்கும் மேல் 5ஜி கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மற்றும் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. ஆகவே, இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத பீச்சர்களையும் இந்த ஸ்பார்க் போன் கொடுத்துள்ளது. மேலும், டிசைனிலும் ரூ.20,000 விலை கொண்ட மாடல்களுக்கு நிகரான லுக் கொடுத்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி அம்சங்கள் (TECNO Spark 30C 5G Specification): 6.67 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுத்துள்ளது. டைனாமிக் போர்ட் பீச்சருக்கு ஏற்ப பஞ்ச்-ஹோல் டிசைனை கொடுத்து இருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Arm Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஹைஓஎஸ் 14 (HiOS 14) வருகிறது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சார் மெயின் கேமராவில் கொடுக்கப்பட்டு உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஓரளவுக்கு ஸ்லிம் பாடி கொடுக்கும்படி 8 மிமீ தடிமன் உள்ளது. மேலும், 189.2 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொண்டுள்ளது. ஆனால், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மட்டுமே வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மேலும், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) உள்ளது. மிட்நைட் ஷேடோ (Midnight Shadow), அரோரா கிளவுட் (Aurora Cloud) மற்றும் அசூர் ஸ்கை (Azure Sky) ஆகிய 3 கலர்களில் இந்த டெக்னோ ஸ்பார்க் 30சி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
19 Percent Discount on TECNO Spark 30C 5G With 4GB RAM 5000mAh Battery in Flipkart Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X