Home
Mobile

அமேசான் அதிரும் பாருங்க.. வெறும் ரூ.11,999 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் Samsung போன்..

அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், 50எம்பி கேமரா எனப் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

அமேசான் அதிரும் பாருங்க.. 50MP கேமரா.. ஆஃபரில் Samsung போன்..

எனவே சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனை தற்போது ரூ.11,999 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும். இப்போது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி அம்சங்கள் ( Samsung Galaxy M15 5G Specifications): 6.5-இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2340 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

50 எம்பி பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 2 எம்பிமேக்ரோ சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ரியர் கேமராக்கள் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட், 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (10x Digital Zoom), ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இதில் உள்ளன. குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)ஆதரவுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது.

தரமான மீடியாடெக் டைமைன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்யுஐ 6 (OneUI 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்(Android 14 OS) மூலம் இந்த சாம்சங் போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த சாதனத்திற்குக் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

அமேசான் அதிரும் பாருங்க.. 50MP கேமரா.. ஆஃபரில் Samsung போன்..

6000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802.11 (Wi-Fi 802.11), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Samsung Galaxy M15 5G With 128GB Storage in Amazon Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X