பிச்சிக்குது பிளிப்கார்ட்.. மட்ட ரேட்ல Samsung 5G போன்.. 5000mAh பேட்டரி.. 25W சார்ஜிங்.. 50MP கேமரா.. மாடல்?
அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், IP54 ரேட்டிங் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி (Samsung Galaxy A17 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் பீச்சர்களுடன் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலையானது, 19 சதவீத தள்ளுபடி போக ரூ.18,444 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, ரூ.17,394 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளாக் (Black), ப்ளூ (Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A17 5G Specifications): 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 6 ஓஎஸ் அப்டேட்கள் மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1330 5என்எம் (Octa Core Exynos 1330 5nm) சிப்செட் மற்றும் ஒன் யுஐ 7.0 (One UI 7.0) உள்ளது.
மாலி ஜி68 எம்பி2 ஜிபியு (Mali G68 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவையும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 13 எம்பி செல்பீ கேமரா கொண்ட மாடலாக இது இருக்கிறது.
இந்த கேமராவுக்கு 10x டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஃபுல்எச்டி (FHD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.
7.5 எம்எம் தடிமன் பாடியில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 192 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இதுவொரு 5ஜி மாடலாக இருக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது.
மேலும், வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் என்எப்சி (NFC) ஆகிய கனெக்டிவிட்டிகளையும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ17 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஸ்லிம் பாடியில் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications