வெளுக்குது விற்பனை.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. எந்த மாடல்?
3X இன்-சென்சார் ஜூமிங் கொண்ட 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி. ஃபுல்எச்டி பிளஸ் ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, டால்பி அட்மோஸ் ஆடியோ போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியாகி விற்பனையில் சக்கைப்போடு போட்ட ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) போனின் குரோமாடிக் பர்பிள் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. இந்த வேரியண்ட் குறித்த விவரம் இதோ.
ரூ.17,000 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா பீச்சருடன் வெளியாகிய போன்களில் ரெட்மி நோட் 13 5ஜி அதிக வரவேற்பு பெற்றது. ஏனென்றால், டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம், 3X இன்-சென்சார் ஜூமிங் போன்ற பீச்சர்களுடன் கூடுதல் கவனம் பெற்றது. இப்போது, பிரீமியம் லுக் கொண்ட குரோமாடிக் பர்பிள் கலருடன் டிசைனிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): இந்த ரெட்மியில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கு பட்ஜெட்டில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும் மாலி ஜி57 எம்சி2 கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. எம்ஐயுஐ 14 (MIUI 14) மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உள்ளது.
இந்த ரெட்மி போனில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் உள்ளது. 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம், 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. 6 ஜிபி + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது. டிஸ்பிளே பீச்சர்களில் பட்ஜெட்டிலும் மிட்-ரேஞ்ச் போன்களுக்கு நிகரான பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், பி3 கலர் காமட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.
ஆகவே, 3X இன்-சென்சார் ஜூமிங் கொண்ட 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ஏஐ போர்ட்ராய்டு மோட் (AI Portrait Mode), நைட் மோட் (Night Mode), டெப்த் கன்ட்ரோல் (Depth Control), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Fliters) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.
16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், டால்டி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. ஆர்டிக் ஒயிட், ஸ்டீல்த் பிளாக், ப்ரிசம் கோல்டு ஆகிய கலர்களில் கிடைத்து வந்தது. இப்போது, குரோமாடிக் பர்பிள் கலரில் வெளியாகி இருக்கிறது.
ரெட்மி நோட் 13 5ஜி விலை (Redmi Note 13 5G Price): இந்த குரோமாடிக் பர்பிள் மாடலின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது. ஆகவே, இந்த ரெட்மி மாடலை ரூ.15,749 பட்ஜெட்டில் வாங்கலாம். எச்டிஎப்சி கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications