அசூர டிஸ்கவுண்ட்.. ரூ.19,999 போதும்.. 100MP கேமரா.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
அமேசான் தள்ளுபடியில் 8 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 100எம்பி கேமரா, 67W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டாசான அம்சங்களை கொண்ட ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro) போன் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 60 ப்ரோ அம்சங்கள் (Realme Narzo 60 Pro Specifications): இந்த ரியல்மி போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் சிப்செட் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) கொண்டிருக்கிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனில் 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1260Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிசொன்சி வருகிறது. அதோடு டிசிஐ பி-3 கலர் காமட் மற்றும் 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 60 ப்ரோ போனில் 100 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் செட்டப் வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம் பெற்றுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி, சினிமாடிக், கிர்ஷ்ப் போன்ற மோட்கள் வருகின்றன.

இந்த நார்சோ மாடலில் 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) வருகிறது. அதோடு டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் வருகிறது.
இந்த போனின் கனெக்விடிட்டி அம்சங்களை பொறுத்தவரை, 5ஜி, டூயல் 4ஜி, ஜிபிஎஸ், வை-பை 6 மற்றும் ப்ளூடூத் 5.2 போன்றவை வருகின்றன. இந்த நார்சோ மாடலில் பிரீமியம் வேகன் லெதர் டிசைன் கொண்ட மார்ஸ் ஆரஞ்ச் (Mars Orange) கலர் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு காஸ்மிக் பிளாக் (Cosmic Black) கலரும் கிடைக்கிறது.

இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை அதிரடியாக குறைக்கப்பட்டு, வெறும் ரூ.21,999க்கு அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த விலையிலும், இப்போது ரூ.2000 மதிப்பில் கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.20,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.19,999க்கு வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








