பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.5001 ஆஃபர்.. SONY கேமரா.. 3D டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) சோனி சென்சார் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்ட ரியல்மி ஜிடி 6டி (Realme GT 6T) போனுக்கு ரூ.5001 விலை குறைப்பு கிடைக்கிறது. நேரடியாக கூப்பன் டிஸ்கவுண்ட் போக இந்த விலைக்கு கிடைப்பதால், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அவசியமில்லை. ஆகவே, பட்ஜெட்டில் கிடைப்பதால் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரியல்மி ஜிடி 6டி அம்சங்கள் (Realme GT 6T Specifications): இந்த ரியல்மியின் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் பிரீமியம் மாடல்களுக்கு நிகராக இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் 4என்எம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 (Octa Core 4nm Snapdragon 7 Plus Gen 3) சிப்செட் மற்றும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ரியல்மி யுஐ 5 (realme UI 5) கிடைப்பதால், கேமரா பீச்சர்கள் மற்றும் கெஸ்ச்சர் பீச்சர்கள் பிரீமியமாக இருக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.78 இன்ச் (2780 × 1264 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்பிடிஓ டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 பீக் பிரைட்னஸ் வருகிறது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 6டி போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதுமட்டுல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.
சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதில் 4K வீடியோ ஷூட் கிடைக்கிறது. மேலும், சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதுபோக சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொடுக்கிறது. இந்த ரியல்மி ஜிடி 6டி போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. மெட்டாலிக் பினிஷிங் கொடுக்கும்படி ப்ளூயிட் சில்வர் (Fluid Silver) மற்றும் ரேஷர் கிரீன் (Razor Green) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. விலை எப்படி?
இந்த ரியல்மி ஜிடி 6டி போனின் 8 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.28,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.3000 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.25,998 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பேட்டரி மற்றும் டிஸ்பிளேவில் பிரீமியம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








