அசூர விற்பனை.. வெறும் ரூ.16,199 போதும்.. 108MP கேமரா.. 2TB மெமரி.. 67W சார்ஜிங்.. எந்த போன்?
108 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 2டிபி மெமரி, 67W சூப்பர்வூக் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கா அம்சங்களை கொண்ட ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) போன் பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியில் மலிவான விலைக்கு கிடைக்கிறது.
ரியல்மி 11 5ஜி அம்சங்கள் (Realme 11 5G Specifications): இந்த ரியல்மி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் கொண்டிருக்கிறது. அதோடு ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த ரியல்மி 11 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.
அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) கொண்டிருக்கிறது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த ரியல்மி 11 போனில் அதிரவிடும் டுயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஆகவே, சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சார் கொண்ட 108 எம்பி கேமரா + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது. இந்த கேமராவில் 3X லாஸ்லெஸ் ஜூமிங் சப்போர்ட் வருகிறது.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இந்த கேமராவை போலவே 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி சிஸ்டமும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. இந்த ரியல்மி போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G)M ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. 8.05 மிமி தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது.
இந்த போனில் குளோரி பிளாக் (Glory Black) மற்றும் குளோரி கோல்டு (Glory Gold) ஆகிய 2 கலர்கள் கிடைக்கின்றன. இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆகவும் இருந்தது.
இருப்பினும், இந்த 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு ரூ.800 பேங்க் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்கலாம். ஆகவே, இந்த போனை வெறும் ரூ.16,199 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








