Home
Mobile

தீபாவளி ஆஃபர்.. 7ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. மலிவு விலையில் கிடைக்கும் நோக்கியா போன்.. எந்த மாடல்?

எச்எம்டி குளோபல் நிறுவனம் அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அட்டகாசமான நோக்கியா போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல் (Flipkart Big Diwali sale) எனும் சிறப்பு விற்பனையில் நோக்கியா சி32 ஸ்மார்ட்போனுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே நோக்கியா சி32 போனை இப்போது ரூ.8,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

50எம்பி கேமரா.. மலிவு விலையில் கிடைக்கும் நோக்கியா போன்.. எந்த மாடல்?

இந்த நோக்கியா சி32 (Nokia C32) ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் எசிடி பிளஸ் வி-நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுவெளிவந்துள்ளது. பின்பு 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புத்தம் புதிய நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி நோக்கியா சி32 ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் ஆனது 7ஜிபி ரேம் (4ஜிபி ரேம் + 3ஜிபி விர்ச்சுவல் ரேம் ) மற்றும் 64ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைகரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய போன். அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த நோக்கியா சி32 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. பின்பு 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன்.

50எம்பி கேமரா.. மலிவு விலையில் கிடைக்கும் நோக்கியா போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்புக்கு என ஐபி52 சான்றிதழ் கொண்டு வெளிவந்துள்ளது நோக்கியா சி32 ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்விட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் இந்த போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் பட்ஜெட் விலையில் பல நோக்கியா 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா ஜி42 5ஜி போனுக்கு இப்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
19 percent discount on Nokia C32 phone on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X