பிளிப்கார்ட் ஆஃபர்.. 50எம்பி கேமரா.. pOLED டிஸ்பிளே.. Motorola 5ஜி போனை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 2025 இந்திய குடியரசு தின (2025 Republic Day Sale) விழா சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடலுக்கு 19 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.20249 இருந்தால் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் அம்சங்கள் (Motorola Edge 50 Fusion Specifications): 6.7 இன்ச் 3டி கர்வ்ட் பிஓஎல்இடி (3D Curved pOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போன். மேலும் இந்த டிஸ்பிளேவில் 2400×1080 பிக்சல்கள், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் இந்த போனில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை வாங்கலாம்.
அதேபோல் ஆப்டிகல் இமேஜ் டெக்னாலஜி மற்றும் சோனி எல்ஒய்டி 700சி (Sony LYT 700C) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மாடல். குறிப்பாக இந்த போனின் கேமராவுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த போனின் வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் வருகிறது. மேலும் இந்த கேமராவில் ஆல்-பிக்சல் போகஸ் (All-Pixel Focus) மற்றும் அல்ட்ரா எச்டி (Ultra HD) வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். அதேபோல் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) கூட இதில் உள்ளது. இதுதவிர ஆடியோ ஜூம் (Audio Zoom), டூயல் கேப்ச்சர் (Dual Capture) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நைட் விஷன் (night vision), டில்ட் ஷிப்ட் (Tilt-Shift) பீச்சர்கள் இதன் ரியர் கேமராக்களில் உள்ளன. பின்பு இந்த போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) மற்றும் பேஸ் ரீடச் (Face Retouch) பீச்சர்கள் இந்த செல்பி கேமராவில் உள்ளன. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. பின்பு மூன்று ஓஎஸ் அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். அதேபோல் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்யூஷன் 5000mAh பேட்டரி மற்றும் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








