பிச்சிக்குது பிளிப்கார்ட்.. வெறும் ரூ.13,499 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. BYBASS சார்ஜிங்.. எந்த போன்?
பிளிப்கார்ட் தளத்தில் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான தள்ளுபடியானது, 16ஜிபி ரேம், 108எம்பி கேமரா, 2டிபி மெமரி, பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் நோட் 30 (Infinix Note 30) போனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 Specification): இந்த இன்பினிக்ஸ் போனில் 6.78 இன்ச் (2460×1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 240Hz சாம்ப்ளிங் ரேட் 580 பீக் பிரைட்னஸ் சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல், என்ஈஜி கிளாஸ் பாதுகாப்பு (NEG Glass Protection) கொண்டிருக்கிறது. எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) மற்றும் மாலி ஜி57 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு (Mali-G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 6nm SoC) சிப்செட் வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
அதேபோல 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட் கொண்டுள்ளது. அதேபோல டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வருகிறது.
இந்த நோட் 30 5ஜி போனில் 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் (Triple Rear System) வருகிறது. அதோடு 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த போனில் IP53 டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த கேமராவை போலவே பேட்டரியும் பக்காவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. வெறும் 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted fingerprint scanner) வருகிறது. இந்த போனில் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஜேபிஎல் (JBL) ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேட்டரியோடு 204.7 கிராம் எடை கொண்டுள்ளது.
இந்த போன் இன்டர்ஸ்டெல்லர் ப்ளூ (Interstellar Blue), மேஜிக் பிளாக் (Magic Black) மற்றும் சன்செட் கோல்டு (Sunset Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் ரூ.1000 உடனடி தள்ளுபடி மற்றும் ரூ.7,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை பெற எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








