Home
Mobile

பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, 108 எம்பி கேமரா, 5800mAh பேட்டரி, 256 ஜிபி மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைனில் வெளியாகிய ஹானர் எக்ஸ்9பி 5ஜி (Honor X9b 5G) போனுக்கு இதுவரையில் கொடுக்கப்படாத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஹானர் எக்ஸ்9பி 5ஜி விலை (Honor X9b 5G Price): இந்த ஹானர் போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் (Amazon) தளத்தில் எச்எஸ்பிசி கிரெடிட் கார்டுக்கு (HSBC Credit Card) ரூ.4,499 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ஜே&கே பேங்க் கிரெடிட் கார்டுக்கு (J&K Credit Card) ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே!

இதுபோக எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.4,499 டிஸ்கவுண்ட் பெற்று இந்த ஹானர் எக்ஸ்9பி போனை வெறும் ரூ.20,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன.

ஹானர் எக்ஸ்9பி அம்சங்சங்கள் (HONOR X9b 5G Specifications): இந்த ஹானர் மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm Mobile) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. மேஜிக்ஓஎஸ் 7.2 (MagicOS 7.2) மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் வருகிறது.

ஆகவே, பட்ஜெட்டிலும் மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனில் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் வருகிறது.

16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ரெக்கார்டிங் (Video Shooting) சப்போர்ட் வருகிறது. 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஆன்டி-டிராப் ரெசிஸ்டன்ஸ் (Anti-Drop Resistance) கொண்டிருக்கிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் வருகிறது. இந்த ஹானர் எக்ஸ்9பி 5ஜி போனில் பக்கா பேக்கப் கொண்ட பெரிய பேட்டரி இருக்கிறது.

ஆகவே, 35W சூப்பர்சார்ஜ் (SuperCharge) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ஸ்லிம் டிசைனில் 7.98 மிமீ தடிமன் மற்றும் 185 கிராம் எடை கொண்டிருக்கிறது. IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. சன்ரைஸ் ஆரஞ்ச் (Sunrise Orange) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஆரஞ்ச் வேரியண்ட் லெதர் பேனல் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
19 Percent Discount on Honor X9b 5G With 108MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X