Home
Mobile

எல்ஜி அட்டியூன் vs சாம்சங் ரெப்லினிஷ் பட்ஜெட் போன்கள்

By Super
எல்ஜி அட்டியூன் vs சாம்சங் ரெப்லினிஷ் பட்ஜெட் போன்கள்
இந்தியாவின் மொபைல்போன் மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது என்று கூறினால் மிகையாகாது. உள்நாட்டு நிறுவனங்களும்,வெளிநாட்டு நிறுவனங்களும் நித்தம் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு சிறிது தடுமாற்றம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது.

எனவே, பட்ஜெட் விலை போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக விரைவில் வர இருக்கும் எல்ஜியின் அட்டியூன் மற்றும் சாம்சங்கின் ரெப்லினிஷ் பட்ஜெட் போன்கள் பற்றிய சிறு ஒப்பீட்டு அலசலை வழங்குகிறோம்.

எல்ஜி அப்டியூன் எளிய பேஸிக் போன் ரகத்தை சேர்ந்ததாக இருக்கிறது.அதேவேளை, சாம்சங் ரெப்லினிஷ் சற்று உயரிய அம்சங்கள் கொண்ட ஹைஎண்ட் ரகத்தை சேர்ந்தது.

ரெப்லினிஷ் 2.8 இஞ்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டி்ஸ்பிளேவுடன் கிவெர்ட்டி கீபேடு கொண்டதாக இருக்கிறது. அதேவேளை, எல்ஜியின் அட்டியூன் 2.8 டிஸ்பிளேவுடன் கிவெர்ட்டி கொண்டதாகவும், ஸ்லைடர் ரக போனாகவும் இருக்கிறது. வடிவமைப்பில் ரெப்லினிஷ் மனதில் இடம் பிடிக்கிறது.

ரெப்லினிஷ் ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனாக இருக்கிறது. எல்ஜி அட்டியூன் புரோப்பரேட்டரி ஓஎஸ் கொண்டதாக இருக்கிறது. எல்ஜி அட்டியூன் போனை விட சாம்சங் ரெப்லினிஷ் சார்ஜை வெகுவாக மிச்சப்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட போனாக இருக்கிறது.

இரண்டு போன்களும் மல்டி மீடியா அம்சங்களில் வாங்குபவர்களுக்கு குறைவைக்காது. ரெக்கார்டிங், ப்ளேபேக் மற்றும் அனைத்து பார்மெட்டுகளிலும் இசை கேட்கும் வசதிகளை வழங்குகின்றன. எப்எம் ரேடியோ மற்றும் யூனிவர்சல் ஆடியோ ஜாக் வசதியும் இரண்டிலும் இருக்கிறது.

சாம்சங் ரெப்லினிஷ் போனில் 2 மெகாபிக்செல் கேமராவையும், எல்ஜி அட்டியூனில் 1.3 மெகாபிக்செல் கேமராவையும் கொண்டுள்ளன. இரண்டிலும், புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் கம்ப்யூட்டருடன் இணைக்கத்தக்க யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட இணைப்பு வசதிகளை பெற்றுள்ளன.

இரண்டு போன்களிலும் பெரிய அளவில் குறை காண முடியவில்லை. இதில், எல்ஜி அட்டியூன் ரூ.4,000 விலையில் வர இருக்கிறது. ஆனால், சாம்சங் ரெப்லினிஷ் விலை குறித்து சரியான தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. இரண்டில், சாம்சங் ரெப்லினிஷ் சிறந்த தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X