முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய மொபைல்போன்

Posted By: Staff

முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகளுடன் புதிய மொபைல்போன்
அதிக வசதிகளுடன் கூடிய புதிய டியூவல் சிம் மொபைலை ஐ-டெல் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மொபைலில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிம்களை உபயோகிக்கும் வசதிகொண்டதாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ-டெல்-ஐ-786 என்ற பெயரில் வரும் இந்த புதிய மொபைல்போனில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஏற்ற வகையி்ல் தொழுகை நேரத்தை எச்சரிக்கை செய்யும் அலாரம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ-டெல் 786 என்ற இந்த மாடலில் முஸ்லிம்களுக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட காலன்டர் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சாக்கட் காலன்டரும் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குத் தேவையான தகவல்கள் இதில் உள்ளதால் மதம் சார்ந்த விஷயம் கொண்ட போன் என்று நினைத்துவிட வேண்டாம்.

சமூகம் சார்ந்த அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது இந்த ஹேண்ட்செட். இதன் மூலம் வருகின்ற வருவாயில் 2.5 சதவீதம் பங்கு ஏழை முஸ்லிம் குழந்தைகளுக்காகப் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொழுது பொக்கு அம்சங்களையும் உபயோகிக்க முடியும். இந்த மொபைலில் உள்ள மீடியாப்ளேயர் எம்பி3, எம்பி4 போன்ற ஃபைல்களை சப்போர்ட் செய்கிறது.

இதில் உள்ள புளூடூத் வசதியின் மூலம் தகவல்களை எளிய முறையில் பரிமாறிக்கொள்ள முடியும். இதில் உள்ள புளூடூதின் விசேஷம் என்னவென்றால், இதனை எந்த ஹேண்செட்டுடன் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஹேண்செட் மாடலில் 1.3 பிக்ஸல் கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துல்லியமாக புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் சிறப்பான வீடியோ ரிக்கார்டிங் வசதியும் உள்ளது.

வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக ஆங்கிலம், ஹிந்தி, உருது, இந்தோனேஷியா, பெர்ஷியன், துருக்கி போன்ற பதினொரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த மாடல் இந்திய சந்தைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.2,999 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot