Home
Mobile

சிறப்பான துல்லியத்தை வழங்கும் கேமராவுடன் புதிய பிளாக்பெர்ரி போன்

By Super
சிறப்பான துல்லியத்தை வழங்கும் கேமராவுடன் புதிய பிளாக்பெர்ரி போன்
மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ள பிளாக்பெர்ரி நிறுவனம் கர்வ்-9380 என்ற மொபைலை வெளியிட உள்ளது. இந்த மொபைலின் பின்புறம் சற்று வித்தியாசமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிளாக்பெர்ரி 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 3.25 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டது. இதனால் அதிக தொழில் நுட்பத்தை வழங்க முடியும். இதில் 800 எம்எச்இசட் சிங்கிள் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

அதோடு இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இதன் கேமரா வசதி. எந்த மொபைலை எடுத்துக் கொண்டாலும் அதன் கேமரா சிறப்பான துல்லியத்தை கொடுக்குமா என்று வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள். கேமராவினுடைய முக்கியத்துவம் இதில் இருந்து புரிகிறது.

கர்வ்-9380 மொபைல் 5.0 மெகா பிக்ஸல் துல்லியத்தைக் கொண்டுள்ளது. அதோடு 2592 X 1944 பிக்ஸல் துல்லியத்தை கொண்டது. இதனால் மிகவும் சிறப்பான புகைப்படத்தையும், வீடியோ ரிக்கார்டிங் போன்ற வசதிகளைப் பெற முடியும்.

இத்தகைய உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா உள்ளதால் வெளியிடங்களுக்கு டிஜிட்டல் கேமராவை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதில் ஆட்டோ டிஜிட்டல் சூம் தொழில் நுட்பமும் உள்ளது. 720பி துல்லியத்தில் வீடியோ ரிக்கார்டிங் செய்ய உதவுகிறது.

மல்டி ஃபார்மெட் மீடியா ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. 1ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியும் உள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டது. இதில் எக்ஸ்டர்னல் மெமரியும் உள்ளது. ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற வசதியையும் பெற முடியும்.

புளூடூத், வைபை, யூஎஸ்பி போன்ற பயன்பாடுகளும் உள்ளது. 3ஜி மற்றும் ஜிபிஆர்எஸ் வசதியும் உள்ளது. இந்த மொபைலுக்கு வாரண்டியும் உண்டு. இதில் லித்தியம்-அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பிளாக்பெர்ரி கர்வ்-9380 ஸ்மார்ட்மொபைல் ரூ.15,000 விலையை ஒட்டிக் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X