OnePlus விஸ்வரூபம்.. 180 நாட்களுக்கு வெச்சாச்சு.. இது நடந்தா வேற போன் மாத்திக்கலாம்.. OnePlus 13 சீரிஸ் பலே!
ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களின் வயிற்றில் பாலை வார்த்தது போல புது கஸ்டமர்களுக்கு 180 நாட்கள் ரீபிளேஸ்மெண்ட் திட்டம் (180 Day Replacement Plan) களமிறக்கப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 Series) மாடல்களை ஆர்டர் செய்ய திட்டமிட்ட கஸ்டமர்கள் இந்த திட்டத்தை பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், குறிப்பிட்ட தேதிக்குள் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த ஒன்பிளஸ் 180 நாட்கள் டிவைஸ் ரீபிளேஸ்மெண்ட் திட்டம் கொடுக்கப்பட இருக்கிறது. முழு விவரங்கள் இதோ.
இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் வெளியாகியது. அமேசான் தளத்தில் ஜனவரி 10 மற்றும் ஜனவரி 13ஆம் தேதிகளில் விற்பனை தொடங்க இருக்கிறது. இந்த தேதிகளுக்கு ஒன்பிளஸ் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருக்கும் நேரத்தில் 180 நாட்கள் டிவைஸ் ரீபிளேஸ்மெண்ட் திட்டத்தை அந்த நிறுவனம் களமிறக்கி இருக்கிறது.

ஒன்பிளஸ் 13 சீரிஸ் மாடல்களின் விற்பனை தொடங்கிய பிறகு பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் அந்த மாடல்களை ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டும் 180 நாட்கள் டிவைஸ் ரீபிளேஸ்மெண்ட் திட்டம் கொடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த 180 நாட்களில் ஒன்பிளஸ் 13 சீரிஸ் மாடல்களில் ஹார்ட்வேர் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், அது ரீபிளேஸ்மெண்ட் செய்யப்படும்.
ஆகவே, புது ரீபிளேஸ்மெண்ட் டிவைஸ் கஸ்டமர்களுக்கு கிடைக்கும். இதை 180 நாட்களில் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். ஒன்பிளஸ் 13 சீரிஸ் மாடல்களில் ஏதாவது ஒன்றை வாங்கிய பிறகு அருகில் இருக்கும் ஒன்பிளஸ் சர்வீஸ் சென்டருக்கு சென்று இந்த ரீபிளேஸ்மெண்ட் திட்டத்தை கிளைம் செய்து கொள்ள வேண்டும். 180 நாட்கள் முடிந்த பிறகும் இதை நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.
ஆனால், மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மாடலுக்கு ரூ.2,599 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடலுக்கு ரூ.2,299 செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் ஆர்டர் செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது, ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் மாடல்களின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
ஒன்பிளஸ் 13 அம்சங்கள், விலை (OnePlus 13 Specifications Price): இந்த ஒன்பிளஸ் போனில் 2K ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் (Snapdragon 8 Elite 4nm) சிப்செட் மற்றும் 3 ஓஎஸ் அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. 120x ஜூமிங்குடன் ஹசல்பிளாட் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் மேக்னடிக் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. IP68 ரெசிஸ்டன்ட் மற்றும் IP69 ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் 13 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆக இருக்கிறது. ஆனால், ரூ.5000 அறிமுக சலுகை போக ரூ.64,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்யலாம். அமேசான், ஒன்பிளஸ் தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இப்போது, ஒன்பிளஸ் 13ஆர் மாடலை பார்ப்போம்.
ஒன்பிளஸ் 13ஆர் அம்சங்கள், விலை (OnePlus 13R Specifications Price): இந்த ஒன்பிளஸ் போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 4 ஓஎஸ் அப்டேட் கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி + 8 எம்பி + 50 எம்பி கேமரா சிஸ்டம் உள்ளது. 16 எம்பி கேமரா மற்றும் 6000mAh பேட்டரி கிடைக்கிறது.
80W சூப்பர்வூக் சார்ஜிங் இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் 13ஆர் போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.42,999ஆக இருக்கிறது. ஆனால், ரூ.3000 அறிமுக சலுகை போக ரூ.39,999 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஜனவரி 13ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும். இந்த தேதியில் இருந்து பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஆர்டர் செய்தால், ரீபிளேஸ்மெண்ட் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








