சாம்சங் கேலக்ஸி 3டி மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் 3டி போன்கள்- ஒப்பீடு

எல்ஜியின் ஆப்டிமஸ் 3டி மொபைல் 4.3 இன்ச் 3டி டிஸ்பிளேயுடன் எல்சிடி கப்பாசிட்டிவ் திரையை கொண்டு 480 X 800 ரிசலூஷனில் செயல்படுகிறது. அதனால் அது பார்ப்பதற்கு அழகுற இருக்கிறது. எனவே, சாம்சங்கின் 3டி போனும் 4.3 இன்ச் அளவுடன் 3டி வசதியுடன் 480 X 800 ரிசலூஷனுடன் இருக்கும் என நம்பலாம். இரண்டு மொபைல்களுமே பயன்படுத்துவோரை கண்டிப்பாக திருப்திபடுத்தும்.
மற்றொரு சிறப்பான அம்சம், சாம்சங் கேலக்ஸி 3டி கேலக்ஸி எஸ்-2வைப் போன்று டூவல் கோர் எக்ஸினோஸ் பிராசஸரைப் பெற்றிருக்கும். அந்த 1.2ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் அதிவிரைவு செயல்திறனைக் கொண்டது. மறுபுறம் எல்ஜி ஆப்டிமஸ் 3டி 1ஜிகாஹெர்ட்ஸ் டூவல் கோருடன் ஏஆர்எம் சிப்பைக் கொண்டிருக்கும். எல்ஜியும் விஆர் எஸ்ஜிஎக்ஸ்-540 சிப்பை கொண்டுள்ளது.
எல்ஜி ஆப்டிமஸ் 3டியில் உள்ள 512 எம்பி ரேம் பாராட்டத்தக்க ஒன்றாக இருக்கிறது. அதனால், சாம்சங்கும் அதே தரத்தில் தனது மொபைலை வழங்கும் என எதிர்பார்க்கலாம். எல்ஜி ஆப்டிமஸ் 3டி போன் 5 மெகா பிக்ஸல் கேமராவைக் கொண்டிருப்பதால் சாம்சுங் 3டி 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் தனது புதிய 3டி மொபைலை அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
எல்ஜியின் கூகுள் ஆன்ட்ராய்டு ஓஎஸ்க்கு பதிலாக புதிய ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்ப்ரீடு ஓஎஸ் மற்றும் டச் விஸ் 4.0 இன்டர்பேஸை சாம்சங் வழங்கும் என நம்பலாம். எல்ஜி ஆப்டிமஸ் 3டி ரூ.34,999க்கு இந்திய சந்தையில் கிடைக்கிறது. சாம்சுங்கும் தனது 3டி மொபைலை அதே விலையில் வழங்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications