இதுக்கு மேல குறைக்க முடியாது.. iPhone 14 மீது அடேங்கப்பானு சொல்லுற அளவுக்கு Flipkart ஆபர்!
மிகவும் பிரபலமான இ-காமர்ஸ் தளங்களில் ஒன்றான பிளிப்கார்ட் (Flipkart), அக்டோபர் மாத ஆரம்பத்தில் இருந்தே தொடர்ச்சியான முறையில் பண்டிகை கால சிறப்பு விற்பனைகளை நடத்தி வருகிறது. பிக் பில்லியன் டேஸ் சேல் (Big Billion Days Sale) என்கிற பெயரில் தொடங்கிய சிறப்பு விற்பனை தற்போது தசரா சேல் 2023 (Dasara Sale 2023) என்கிற பெயரில் நடந்து வருகிறது.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி அன்று தொடங்கி பிளிப்கார்ட் தசரா விற்பனையானது அக்டோபர் 29 வரை அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த விற்பனையிலும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், பிசிக்கள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல தயாரிப்புகளின் மீது பெரிய அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது.

குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்கள் (Old iPhone Models) மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 (iPhone 14) மாடலை வாங்க விரும்பினால், இதுவே அதற்கான சரியான நேரமாக இருக்கலாம்.
ஏனென்றால், ஐபோன் 14 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் (Basic Storage) ஆப்ஷன், அதாவது 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது 18% நேரடி தள்ளுபடி (Initial Discount) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.69,900 க்கு பதிலாக, ரூ.12,901 என்கிற நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் ப்ளூ (Blue), மிட்நைட் (Midnight), பர்பிள் (Purple), ஸ்டார்லைட் (Starlight), ப்ராடெக்ட் ரெட் (Product Red) மற்றும் யெல்லோ (Yellow) கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

நேரடி தள்ளுபடியை தவிர்த்து, ஐபோன் 14 மீது கூடுதலாக சில வங்கி சலுகைகளும் (Bank Offers) அணுக கிடைக்கிறது, இதன் மூலம் ஐபோன் 14 மாடலின் இறுதி விலையை (Final Price) இன்னும் குறைக்க முடியும். வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ (SBI), ஆர்பிஎல் (RBL) அல்லது கோடாக் மஹிந்த்ரா பேங்க் (Kodak Mahindra Bank) கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து ஐபோன் 14 மீது எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் (Exchange Offer) கிடைக்கிறது.
ஐபோன் 14 முக்கிய அம்சங்கள்: நினைவூட்டும் வண்ணம் இது டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு மற்றும் ஆப்பிளின் செராமிக் ஷீல்டு பாதுகாப்பு (Ceramic Sheild Security) உடனான 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்பிளேவை (6.1-inch Super Retina XDR OLED display) கொண்டுள்ளது. இதுஆப்பிளின் சொந்த ஏ15 பயோனிக் சிப்செட் (Apple A15 Bionic Chipset) மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஐஓஎஸ் 16 (iOS 16) கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஐபோன் 14 மாடலில் 12 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது, இதில் வைட்-ஆங்கிள் லென்ஸ் (Wide Angle Lens) மற்றும் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் (Ultra Wide Angle Lens) ஆகியவைகள் அடங்கும். செல்பீ கேமராவை பொறுத்தவரை, இதில் 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் லென்ஸுடன் (TrueDepth Lens) வருகிறது.
பேட்டரியை பொறுத்தவரை, ஆப்பிளின் கூற்றுப்படி ஐபோன் 14 மாடலானது 20 மணிநேரம் வரையிலான வீடியோ பிளேபேக் டைம்-ஐ (20Hrs Video Playback Time) வழங்கும். இதன் டிஸ்பிளே நாட்ச்சில் (Display Notch) அமைந்துள்ள சென்சார்களின் சீரிஸை பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபேஸ் ஐடியையும் (Face ID) இது ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங் (IP68 Rating) உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








