Home
Mobile

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.11,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. 5030mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் விற்பனையில் (Fipkart Sale) 108 எம்பி கேமரா, 5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G) போனானது, அடித்து தூக்கும் டிஸ்கவுண்ட் காரணமாக அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட் எந்தெந்த பேங்க் கார்டுகளுக்கு கிடைக்கிறது? கம்மி பட்ஜெட்டிலும் என்னென்ன பீச்சர்களை பேக் செய்துள்ளது? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது பார்ப்போம்.

போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M6 Plus 5G Specifications): இந்த பட்ஜெட்டிலும் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது. 6.79 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.11,999 பட்ஜெட்ல 108MP கேமரா.. எந்த போன்?

டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் வருகிறது. அதேபோல பட்ஜெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஈ 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 AE 4nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான ஹைப்பர்ஓஎஸ் (Hyper OS) மற்றும் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) உள்ளது.

இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனில் கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும்படி டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, சாம்சங் ஐசோசெல் எச்எம்6 (Samsung ISOCELL HM6) சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவுடன் 2 எம்பி மேக்ரோ கேமரா பேக் செய்யப்பட்டுள்ளது. 13 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.

இந்த போக்கோ கேமராவில் மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு மாடலும் விற்பனைக்கு வருகிறது. பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்பும்படி இருக்கும்.

மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 1 டிபிக்கான கார்டு பயன்படுத்தலாம். இந்த எஸ்டி கார்டு சிலாட் மட்டுமல்லாமல், ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) வருகிறது. இந்த போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனின் பேட்டரி சிஸ்டம் பொறுத்தவரை, 5030mAh பேட்டரி வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. அதேபோல IP53 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), பாட்டம் ஃபயரிங் லவுட்ஸ்பீக்கர் (Bottom Firing Loudspeaker) வருகிறது. 8.3 எம்எம் தடிமன், 205 கிராம் எடை உள்ளது.

இந்த போக்கோ போனில் ஐஸ் சில்வர் (Ice Silver), கிராஃபைட் பிளாக் (Graphite Black), மிஸ்டி லாவண்டர் (Misty Lavender) ஆகிய கலர்கள் வருகின்றன. இந்த போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.13,499ஆகவும், 8 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.14,499ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது 6 ஜிபி மாடல் வெறும் ரூ.12,999 பட்ஜெட்டில் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

இதுபோக ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.8,850 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த 108 எம்பி கேமரா, 5030mAh பேட்டரி கொண்ட போக்கோ எம்6 பிளஸ் 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
18 Percent Dsicount on Poco M6 Plus 5G With 108MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X