பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்58 5ஜி (Vivo Y58 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவோ போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ ஒய்58 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,499 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2 ) சிப்செட் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி போன். அதேபோல் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
குறிப்பாக 6.72 ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி போன் . மேலும் இந்த டிஸ்பிளேவில் 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1024 நிட்ஸ் HBM பிரைட்னஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதில் ஸ்மார்ட் டைனமிக் லைட் உள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதேபோல் பன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (Stereo speaker setup), 300% ஆடியோ பூஸ்டர் ( 300% audio booster), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certificati on) கொண்டுள்ளது இந்த போன்.
விவோ ஒய்58 5ஜி போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டூயல் சிம், 5ஜி (5G), டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications








