Home
Mobile

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.20,999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 1 டிபி மெமரி, 16 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட்டில் வெளியான விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G) போனின் விற்பனையானது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தொடங்கி இருக்கிறது. டிஸ்கவுண்ட்டில் கிடைப்பதால், ஆர்டர் வெளுத்து கட்டுகிறது. இந்த விவோ ஒய்300 5ஜி போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

டயமன்ட் கட் கேமரா டிசைன் (Diamond-cut Camera Design) மற்றும் ஆரா எல்இடி (Auro LED) கொண்ட பிரீமியம் பாடி கொண்டிருக்கிறது. ரெயின் வாட்டர் ரெசிஸ்டனட் மற்றும் வெட் டச் டெக்னாலஜி கொண்ட டிஸ்பிளே சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட்டில் பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக இந்த விவோ இருக்கிறது.

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.20,999 போதும்.. AMOLED டிஸ்பிளே!

விவோ ஒய்300 5ஜி அம்சங்கள் (Vivo Y300 5G Specifications): இந்த விவோவில் நைட் மற்றும் போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்கும்படி ஆரா எல்இடி கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. ஆகவே, சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் மெயின் கேமராவும், 2 எம்பி போர்ட்ராய்டு கேமராவும் பேக் செய்யப்பட்டுள்ளது.

இந்த டூயல் கேமராவில் 2எக்ஸ் போர்ட்ராய்டு (2x Portrait), ஏஐ ஆரா லைட் போர்ட்ராய்டு (AI Aura Light Portrait), ஏஐ எரைஸ் (AI Erase) மற்றும் ஏஐ என்ஹான்ஸ் (AI Enhance) பீச்சர்கள் வருகின்றன. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ஒய்300 5ஜி போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் வருகிறது.

இந்த சிப்செட்டுடன் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 2 மெமரி வேரியண்ட்கள் இருக்கின்றன.

பிச்சிக்கிட்டு போகுது.. வெறும் ரூ.20,999 போதும்.. AMOLED டிஸ்பிளே!

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலும் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த விவோ ஒய்300 5ஜி போனின் டிஸ்பிளே பீச்சர்கள் மிட்-ரேஞ்ச் மாடல்களை போல பேக் செய்யப்பட்டுள்ளது. 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்கள்) ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. FHD+ ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டைப்-சி ஆடியோ (Type-C Audio) IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் இருக்கிறது. மிட்-ரேஞ்ச் விவோ மாடல்களில் கிடைக்கும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த விவோவில் 3 கலர்கள் இருக்கின்றன.

பாண்டம் பர்பிள் (Phantom Purple), டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) கலர்கள் கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மெமரி போனின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) ரூ.1000 டிஸ்கவுண்ட் போக ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக்குக்கு ஏற்ற மாடலாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Vivo Y300 5G With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X