யாரு சாமி அவன்.. ரூ.11999 பட்ஜெட்ல 12GB ரேம்.. 108MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
இந்த பட்ஜெட்ல 12 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 1 டிபி மெமரி வருதா? யாரு சாமி அவன்? என்று கேட்கும்படி டெக்னோ போவா 6 நியோ (TECNO POVA 6 NEO 5G) போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைப்பதால், மேலும் அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. 108 எம்பி கேமரா கொண்ட பட்ஜெட் போன்களில் இந்த போன் இடம் பெற்றுள்ளது.
இந்த போனின் விற்பனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் டிஸ்கவுண்ட் உடன் தொடங்கி இருக்கிறது. 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. இப்போது, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த போனை வாங்கலாம்.

இந்த பட்ஜெட்டில் டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்கள் மட்டுமால்லாமல், ஏஐஜிசி போர்ட்ராய்டு (AIGC Portrait), ஏஐ கட்அவுட் (AI Cutout), ஏஐ மேஜிக் எரைசர் (AI Magic Eraser) மற்றும் ஏஐ ஆர்ட்போர்ட் (AI Artboard) போன்ற ஏஐ பீச்சர்களும் பேக் செய்யப்பட்டுள்ளன. இப்போது முழு பீச்சர்களையும் பார்த்துவிட்டு வொர்த்தான போனா என்பதை பார்ப்போம்.
டெக்னோ போவா 6 நியோ 5ஜி அம்சங்கள் (TECNO POVA 6 NEO 5G Specifications): இந்த டெக்னோ போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் வருகிறது. 6 ஜிபி ரேம் வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மற்றொரு வேரியண்ட் இருக்கிறது.
இந்த வேரியண்ட்டில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. அதேபோல 2 வேரியண்ட்களிலும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஹாய்ஓஎஸ் 14.5 (HiOS 14.5) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா பர்பஃபென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் வருகிறது. 108 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் பேக் செய்யப்பட்டுள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual LED Flash) சப்போர்ட் வருகிறது. இந்த டெக்னோவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொண்டிருக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) வருகிறது. இந்த டெக்னோவில் IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.
7.8 மிமீ தடிமன் மற்றும் 192.3 கிராம் எடை உள்ளது. 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டெக்னோ போவா 6 நியோ 5ஜி போனில் அசுர் ஸ்கை (Azure Sky), மிட்நைட் ஷேடோ (Midnight Shadow) மற்றும் அரோரா கிளவுட் (Aurora Cloud) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. பட்ஜெட்டில் நல்ல ஆப்ஷாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications