வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரூ.12,000 பட்ஜெட்டில் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப், நல்ல கேமரா குவாலிட்டி, மீடியம் பர்ஃபாமென்ஸ் இருக்குற போன் வேண்டும். அதுவும் சாம்சங்கில் வேண்டும் என்று கேட்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு தள்ளுபடியோடு விற்பனையாகும் சாம்சங் கேலக்ஸி எப்15 போன் பக்காவான தேர்வாக இருக்கும்.
இந்த போனின் 6000mAh பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட், 50 எம்பி கேமரா போன்ற முக்கிய அம்சங்கள் அனைத்தும் விலையைவிட சற்று கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொண்டதாகவே இருக்கின்றன. இந்த போனின் முழு அம்சங்கள் எப்படி இருக்கிறது? விலையும் தள்ளுபடியும் எவ்வளவு உள்ளிட்ட விவரம் இதோ.

சாம்சங் கேலக்ஸி எப்15 அம்சங்கள் (Samsung Galaxy F15 Specifications): இந்த போனில் நல்ல பர்ஃபாமென்ஸ் உடைய ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் உள்ளது. மீடியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆர்ம் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதேபோல கம்மியான பட்ஜெட்டில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. 50 எம்பி ரியர் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 13 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சப்போர்ட் வருவதால், மிட்-ரேஞ்ச் டிஸ்பிளே குவாலிட்டி கொடுக்கும். அதோடு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஆகவே, வெர்ஷனிலும் லேட்டஸ்ட் அனுபவம் கிடைக்கும். 2 வேரியண்ட்கள் கொண்டிருக்கிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 1 டிபிக்கான எஸ்டிகார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் அளவிலான 6000mAh பேட்டரியை இந்த போன் கொண்டிருக்கிறது. அதோடு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
ஆகவே, டிஸ்பிளேவை போலவே பேட்டரியும் விலையைவிட கூடுதல் ரேஞ்ச்சில் கிடைக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), 9.4 மிமீ தடிமன் மற்றும் 217 கிராம் எடை கொண்டுள்ளது. இதுவொரு 5ஜி போனாகும். ஆகவே, 5ஜி மற்றும் டூயல் 4ஜி சப்போர்ட் உள்ளது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 போனில் அஸ் பிளாக் (Ash Black), ஜேஸி கிரீன் (Jazzy Green ) மற்றும் க்ரூவி வயலட் (Groovy Violet) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.
அதேபோல 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499ஆக இருக்கிறது. இந்த விலையில், எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல ரூ.6,800 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. ஆகவே, இந்த போனை ரூ.11,999 ஆரம்ப விலையில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








