பிச்சிக்குது விற்பனை.. வெறும் ரூ.11,999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 50 எம்பி மெயின் கேமரா, 6000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போனுக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடி மற்றும் முழு அம்சங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10000 பட்ஜெட்டில் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் கேமரா பீச்சர்கள் பட்டையை கிளப்பும்படி வேண்டுமானால், கூடுதலாக ரூ.1000 சேர்த்து இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கி கொள்ளலாம். ஏனென்றால், சூப்பர் அமோலெட் டிஸ்பிளே தொடங்கி, டிரிபிள் ரியர் கேமரா மற்றும் பெரிய பேட்டரி சிஸ்டம் இதில் பேக் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (SAMSUNG Galaxy F15 5G Specifications): டிஸ்பிளேவை பார்க்கையில், 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-வி சூப்பர் அமோலெட் (Infinity-V Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் வருவதால், மிட்-ரேஞ்ச் அவுட்புட் எதிர்பார்க்கலாம். மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.
இந்த பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஒன்யுஐ 6 (OneUI 6) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. 10x டிஜிட்டல் ஜூமிங் சப்போர்ட் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது.
ஆகவே, ஃபுல்எச்டி பிளஸ் வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி 13 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, பட்ஜெட்டில் நல்ல ஜூமிங் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக இந்த போனை எதிர்பார்க்கலாம்.
இந்த சாம்சங் போனை 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த வேரியண்ட்களில் 1 டிபிக்கான மைக்ரோஎஸ் எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளன. அதேபோல ஹைபிரிட் டூயல் சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) வந்திருக்கிறது.
பேட்டரி பேக்கப் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்காகவே 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) வருகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வந்திருக்கிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகமான போதும், அதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 12,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆகவும் இருந்தது. ஆனால், இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் 4 ஜிபி ரேம் மாடலானது ஆர்டருக்கு கிடைக்கிறது.
இந்த உடனடி டிஸ்கவுண்ட்டை பெற எச்டிஎப்சி கிரெடிட் கார்டு மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். ஆகவே, ரூ.11,999 பட்ஜெட்டில் இந்த போனை ஆர்டர் செய்து கொள்ள முடியம். இதுபோக ரூ.7,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. மலிவு விலை சாம்சங் போன்களில் இது பெஸ்ட் ஆப்ஷன்.


Click it and Unblock the Notifications