அடிச்சான் பாரு அமேசான்.. ரூ.12,248 போதும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் தரமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, டைமன்சிட்டி சிப்செட், சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வ செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.12,248 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100+ Chipset) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 14 மூலம் போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED)டிஸ்பிளேவை கொண்டுள்ளது அசத்தலான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera Setup) அமைப்புடன் இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








