ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. sAMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்..
பிளிப்கார்ட் தளத்தில் big bachat sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளே, 600mAh பேட்டரி, 50எம்பி கேமரா எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
அதன்படி பிளிப்கார்ட் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் அளவிலான சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளே உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் விற்பனைக்கு வருகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
குறிப்பாக 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த போன். எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








