Home
Mobile

ஆர்டர் அனல் பறக்குது.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி, 50MP கேமரா.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி, சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 50எம்பி கேமரா உள்ளிட்ட தரமான அம்சங்கள் கொண்ட சாம்சங் 5ஜி போனை கம்மி விலையில் வாங்க விருப்பம் இருக்கிறதா? அப்போ இந்த பிளிப்கார்ட் தள்ளுபடி ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G) போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அனல் பறக்குது.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (Dimensity 6100+ Chipset) கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அனைத்து ஆப்ஸ்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்.

6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். 2340 x 1080பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் ஆனது 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

ஆர்டர் அனல் பறக்குது.. ஆஃபரில் Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்தது. எனவே இந்த நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி இதில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Samsung Galaxy F15 5G with 50mp camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X