Home
Mobile

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி (Samsung Galaxy F15 5G ) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.11,999 இருந்தால் இந்த போனை வாங்கிவிட முடியும்.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F15 5G Specifications): 6.5-இன்ச் சூப்பர் அமோஎல்இடி (sAMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் ( Dimensity 6100+ Chipset) வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் வெளிவந்தது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்

அதேபோல் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி கேமரா + 2 எம்பி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பைக் (Triple Rear Camera Setup) கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் இந்த போனின் முன்பக்கத்தில் 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 13 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவுடன் (13 5G Bands Support) வருகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் 4 ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates For 4 Years)மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை (Security Updates For 5 Years) பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அள்ளி வீசுது பிளிப்கார்ட்.. ஆஃபரில் சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போன் 6000mAh பேட்டரியை பேக் செய்கிறது. எனவே சாம்சங் கேலக்ஸி எப்15 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் இந்த போன். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on SAMSUNG Galaxy F15 5G in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X