Home
Mobile

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.8099 போதும்.. 32MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரூ.10000 பட்ஜெட்டுக்குள் பட்டையை கிளப்பும் ஸ்மார்ட்போன் தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு அதைவிட கம்மியான பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டிராப் ரெசிஸ்டன்ட், ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட், 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, 32 எம்பி கேமரா, ஐ கம்போர்ட் டிஸ்பிளே, ஆக்டா கோர் சிப்செட், 5000mAh பேட்டரி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி சி61 (Realme C61) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த ரியல்மி சி61 போனின் முழு விவரங்கள் இதோ.

கம்மியான பட்ஜெட்டில் கிடைக்கும் போன்கள் பெரும்பாலும் பிரீமியம் லுக் கிடைக்காது. ஆனால், ரியல்மி நிறுவனம் பக்காவான டிசைன் மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கும் போன்களை ரூ.10000 பட்ஜெட்டுக்குள் களமிறக்கி வருகிறது. இதனாலேயே பட்ஜெட் பிரியர்களிடையே ரியல்மி போன்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.8099 போதும்.. 32MP கேமரா போன்!

அந்த வரிசையில், மெட்டாலிக் பிரேம், டிராப் ரெசிஸ்டன்ட் (Drop Resistant), பெண்ட் ரெசிஸ்டன்ட் (Bend Resistant) மற்றும் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் (Scratch Resistant) கொண்ட பாடி மற்றும் பிரீமியம் லுக் கொண்ட சபாரி கிரீன் (Safari Green) மற்றும் மார்பிள் பிளாக் (Marble Black) கலர்களில் ரியல்மி சி61 போன் இந்திய மார்கெட்டில் அறிமுகமானது.

ரியல்மி சி61 அம்சங்கள் (Realme C61 Specifications): இந்த போனில் ஐ கம்போர்ட் சப்போர்ட் கொண்ட 6.78 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) ஐபிஎல் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

IP54 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் ரேய்ன்போர்ஸ்டு கிளாஸ் (Reinforced Glass) வருகிறது. இந்த ரியல்மி சி61 போனில் 6 ஜிபி ரேம் + 6 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும். அதேபோல 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

தூக்குங்கடா அந்த தங்கத்த.. வெறும் ரூ.8099 போதும்.. 32MP கேமரா போன்!

இந்த மாடல்களில் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் பட்டையை கிளப்பும்படி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ரியல்மி யுஐ (realme UI) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் (Octa Core UNISOC T612 12nm) சிப்செட் மற்றும் மாலி கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது.

32 எம்பி சூப்பர் கிளியர் மெயின் கேமரா மற்றும் டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் 1080P வீடியோ ஷூட் சப்போர்ட் வருகிறது. நோட்டிபிகேஷன்களுக்காக ரியல்மி போன்களில் கொடுக்கப்படும் மினி கேப்சூல் 2.0 (Mini Capsule 2.0) பீச்சர் வருகிறது.

பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் டூயல் 4ஜி வோஎல்இடி கனெக்டிவிட்டி வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. ரூ.900 டிஸ்கவுண்ட் உடன் பிளிப்கார்டில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Realme C61 With 12GB RAM, 32MP Camera in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X