ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.16000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 18GB ரேம்.. 45W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
நம்ப முடியாத கம்மி பட்ஜெட்டில் சாம்சங் ஐசோசெல் சென்சார் கேமரா, 120Hz டிஸ்பிளே, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி, 18 ஜிபி ரேம் மற்றும் 2 டிபி மெமரி போன்ற பீச்சர்களுடன் வெளியான ரியல்மி 13 5ஜி (Realme 13 5G) போனின் விற்பனை டிஸ்கவுண்ட் உடன் தொடங்கி இருக்கிறது. பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கும் இந்த ரியல்மி 13 5ஜி போனின் விலை, விற்பனை மற்றும் முழு பீச்சர்களை பார்க்கலாம்.
ரியல்மி 13 5ஜி அம்சங்கள் (Realme 13 5G Specifications): ரெயின் வாட்டர் ஸ்மார்ட் டச் (Rainwater Smart Touch) மற்றும் ஐ கம்போர்ட் (Eye Comfort) கொண்ட 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. மேலும், 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

சாம்சங் ஐசோசெல் எஸ்5கேஜேஎன்எஸ் (Samsung ISOCELL S5KJNS) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது. 2K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். ஸ்ட்ரீட் மோட் (Street Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
இந்த ரியல்மி 13 5ஜி போனில் 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், 10 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) மற்றும் 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

மிட்-பட்ஜெட் போன்களில் கொடுக்கப்படும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 5.0 (realme UI 5.0) வருகிறது. ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் (Hybrid Dual SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் பேக் செய்யப்பட்டுள்ளது.
ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) போர்ட் வருகிறது. இந்த ரியல்மியில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
7.79 மிமீ தடிமனில் ஸ்லிம் பாடி கொண்டிருக்கிறது. அதேபோல 190 கிராம் எடை வருகிறது. 5ஜி மற்றும் டூயல் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ரியல்மி 13 5ஜி போனில் டார்க் பர்பிள் (Dark Purple) மற்றும் ஸ்பீடு கிரீன் (Speed Green) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.
ரியல்மி 13 5ஜி விலை (Realme 13 5G Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








