Home
Mobile

ஆர்டர் அள்ள போகுது.. சோனி கேமரா.. IP69 ரேட்டிங்.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த போன் சோனி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் அள்ள போகுது.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro Specifications) : தரமான ஆக்டோ-கோர் டைமன்சிட்டி 8350 எக்ஸ்ட்ரீம் 4என்எம் (Octa Core Dimensity 8350 Extreme 4nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி615 எம்சி6 ஜிபியு (Mali-G615 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனில் உள்ளது.

6.7-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50எம்பி சோனி எல்ஒய்டிஐஏ 700சி (Sony LYTIA 700C) சென்சார் + 50எம்பி ஆட்டோ போகஸ் அல்ட்ரா வைடு லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. அதேபோல் 50X சூப்பர் ஜூம், மல்டிஸ்பெக்ட்ரல் 3-இன்-1 லைட் சென்சார், எக்ஸ்போஷர், ஆட்டோ ஒயிட் பேலன்ஸ், ஃப்ளிக்கர் உள்ளிட்ட பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு MIL-STD-810H இராணுவ-தர சான்றிதழ் பெற்றுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடல். Moto AI அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6இ 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பான்டோன் டாஸ்லிங் ப்ளூ (Pantone Dazzling Blue), பான்டோன் ஷேடோ (Pantone Shadow) மற்றும் பான்டோன் ஸ்பார்க்லிங் கிரேப் (Pantone Sparkling Grape)நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Motorola Edge 60 Pro With 50MP Camera in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X