Home
Mobile

அதிரி புதிரி ஆர்டர்.. சோனி கேமரா.. 68W சார்ஜிங்.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சோனி கேமரா, பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது இந்த போன். மேலும் மோட்டோரோலா எட்ஜ் 50 போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட்டில் மோட்டோரோலா எட்ஜ் 50 போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.25749 விலையில் வாங்கிவிட முடியும்.

அதிரி புதிரி ஆர்டர்.. ஆஃபரில் மோட்டோரோலா  5ஜி போன்.. எந்த மாடல்?

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் வெளிவந்துள்ளது.அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

அதேபோல் 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக MIL-810H இராணுவ சான்றிதழ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், 5W ரிவர்ஸ் வயர்லெஸ் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz)நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ஆனது 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Motorola Edge 50 With 50MP Camera in Flipkart Sale specs price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X