ஆர்டர் பறக்குது.. 68W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Motorola 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் 68 வாட்ஸ் சார்ஜர், ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.27,999 இருந்தால் போதும் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ அம்சங்கள் (Motorola Edge 50 Pro specifications): 6.67-இன்ச் 1.5கே 10-பிட் பிஒஎல்இடி டிஸ்பிளே (1.5K 10-bit pOLED display) வசதியுடன் இந்த போன் அறிமுகம் வெளிவந்தது. 22712 x 1220 பிக்சல்ஸ், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 720 ஜிபியு(Adreno 720 GPU) கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு ஆட்டோஃபோகஸ் கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிப்ளி ரியர் கேமராகொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்துள்ளது. மேலும் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 4500எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனில்5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏஎக்ஸ், புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மெட்டல் பிரேம் கொண்ட லக்ஸ் லாவெண்டர் (Luxe Lavender) மற்றும் பிளாக் பியூட்டி (Black Beauty) நிறங்களில் இந்த போன் கிடைக்கும். இதுதவிர மூன் லைட் பேர்ல் ஃபினிஷ் லிமிடெட் எடிஷன் (moonlight pearl limited edition) ஆப்ஷன் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications