Home
Mobile

பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரூ.10000 கூட வேண்டாம், வெறும் ரூ.7000 பட்ஜெட் போதும், 50 எம்பி கேமரா, 8 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட மோட்டோ ஜி04எஸ் (Moto G04s) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் பட்டையை கிளப்பும் பேங்க் டிஸ்கவுண்ட்டில் அடிச்சு புடிச்சு விற்பனையாகும் இந்த மோட்டோ ஜி04எஸ் போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் என்ன?

ரூ.10000 பட்ஜெட்டில் போன் தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்கள் மோட்டோ நிறுவனத்தின் மாடல்களை பார்க்கலாம். ஏனென்றால், பில்ட் குவாலிட்டி மற்றும் டிசைன் பக்காவாக இருக்கும். அதேபோல பீச்சர்களிலும் பட்ஜெட்டைவிட கூடுதல் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியும். இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ரூ.7000 பட்ஜெட்டில் மோட்டோ ஜி04எஸ் கிடைக்கிறது.

பிச்சிக்குது ஆர்டர்.. ரூ.7000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 1TB மெமரி மாடல்!

மோட்டோ ஜி04எஸ் அம்சங்கள் (Moto G04s Specification): இந்த மோட்டோ பட்ஜெட் மாடலாக இருந்தாலும், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) கொண்டிருக்கிறது. ஆனால், சிப்செட் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி ஆக்டா கோர் யுனிசோக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) மட்டுமே வருகிறது. இந்த சிப்செட் போல மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) உள்ளது.

ஆனால், டிஸ்பிளேவை குறை சொல்ல முடியாது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்புடன் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 537 நிட்ஸ் பிரைட்னஸ் பேக் செய்துள்ளது. வாட்டர்-டிராப் அல்லாமல் பஞ்ச்-ஹோல் டிசைனில் கிடைக்கிறது.

இந்த மோட்டோ ஜி04எஸ் போனில் 4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சிலாட் கிடைக்கிறது. குவாட் பிக்சல் (Quad Pixel) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுட்ன சிங்கிள் ரியர் கேமரா சிஸ்டம் (Single Rear Camera System) உள்ளது.

இருப்பினும், ஆட்டோ போகஸ் (Auto Focus), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் நைட் மோட் (Night Mode) பீச்சர்கள் வருகின்றன. இந்த மோட்டோ போனில் 5 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ கொண்ட பாட்டம் ஸ்பீக்கர்கள் வருகின்றன.

இந்த மோட்டோ 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G LTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும் வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) பயன்படுத்தலாம். இந்த மோட்டோ ஜி04எஸ் போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,199ஆக இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.819 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஆகவே, ரூ.7,379 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் டிசைன் மற்றும் பேட்டரி சிஸ்டம் வேண்டுமானால், இந்த மோட்டோ பக்காவான ஆப்ஷனாகும். கான்கோர்ட் பிளாக் (Concord Black), சீ கிரீன் (Sea Green), சன்ரைஸ் ஆரஞ்சு (Sunrise Orange) அல்லது சாடின் ப்ளூ (Satin Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
18 Percent Discount on Moto G04s With 50MP Camera in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X