ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.12,302 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா நிறுவனத்தின் ஸ்டார்ம் 5ஜி (Storm 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வெளியானபோது, அறிமுக சலுகையில் ரூ.13,499 பட்ஜெட்டில் கிடைத்தது. இப்போது, அமேசான் தளத்தில் வெறும் ரூ.13,052 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. இதுபோக கஸ்டமர்களுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மூலம் ஆர்டர் செய்தால், ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.12,302 பட்ஜெட்டில் வாங்க முடியும். மேலும், ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. கேல் கிரீன் (Gale Green) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய பிரீமியம் லுக் கொடுக்கும் கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
லாவா ஸ்டார்ம் 5ஜி அம்சங்கள் (Lava Storm 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கிடைக்கிறது. இதற்கு 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.
6.78 இன்ச் (2460 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 396 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும். 16.7 கலர் டெப்த் மற்றும் 2.5டி கர்வ்ட் டிசைன் கிடைக்கிறது. இதுவொரு பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே மாடலாகும். ஆகவே, பிரீமியம் லுக் கொடுக்கும்.

இந்த லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. வழக்கமாக கிடைக்கும் போர்ட்ராய்டு, எச்டிஆர், நைட், ஸ்லோவ் மோஷன் ஃபிலிம், அல்ட்ரா எச்டி போன்ற கேமரா மோட்கள் கிடைக்கின்றன.
128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், கூடுதலாக பயன்படுத்தி கொள்ள 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போன் பட்ஜெட் மாடலாக இருந்தும், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொடுக்கிறது. அதேபோல 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) உள்ளது.
ஆடியோவுக்கு 3.5 எம்எம் ஜாக் (3.5mm Jack) கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் 5ஜி ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 5000mAh பேட்டரி இருப்பதால், 8.96 எம்எம் தடிமன் மற்றும் 214 கிராம் எடை வருகிறது. மேலும், டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) கொடுக்கிறது.
இந்த லாவா மொபைல்ஸ் நிறுவனமானது, இந்தியாவை சேர்ந்த நிறுவனமாக இருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிகராக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. கேமிங், பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமரா என்று ஒட்டுமொத்தமாகவே பட்டையை கிளப்பும்படி மாடல்கள் கிடைக்கின்றந. இதில் ஸ்டார்ம் சீரிஸ் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








