யாரு சாமி அவன்.. ரூ.17,998 போதும்.. 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 66W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசானில் (Amazon) நடக்கும் லாவா டேஸ் விற்பனையில் (Lava Days Sale) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே. சோனி சென்சார் மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போனுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இப்போது, ஆர்டர் செய்தால், பேங்க் கார்டுகள் இல்லாமலேயே ரூ.3000 கூப்பன் டிஸ்கவுண்ட்டில் வாங்கி கொள்ளலாம். ஆனால், அதற்கு முன்பாக பீச்சர்கள் எப்படி என்பதை பாருங்கள்.
இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் மெயின் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 1.74 இன்ச் செகண்டரி டிஸ்பிளேவும் கிடைக்கிறது. இதனால், அடிமட்ட விலைக்கு கிடைக்கும் டூயல் டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. இருப்பினும், 2 டிஸ்பிளேக்களிலும் அமோலெட் பேனலை கொடுத்து கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. மற்ற பீச்சர்களும் அப்படித்தான் பட்ஜெட்டில் கிடைக்காதவையாக இருக்கின்றன.

லாவா அக்னி 3 5ஜி அம்சங்கள் (Lava Agni 3 5G Specifications): இந்த லாவா போனில் 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.78 இன்ச் (1200 x 2652 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) மெயின் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 429 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அதேபோல 1.74 இன்ச் (336 x 480 பிக்சல்கள்) மினி டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த 2டி அமோலெட் டிஸ்பிளேவில் 336 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இந்த டிஸ்பிளே மூலம் ரியல் கேமரா செல்பீ, நோட்டிபிகேஷன்கள், மியூசிக் கன்ட்ரோல்கள், குயிக் ரீப்ளை போன்ற பீச்சர்களை பயன்படுத்தலாம். இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் ஆக்டா கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7300எக்ஸ் (Octa Core 4nm MediaTek Dimensity 7300X) சிப் வருகிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கிடைக்கிறது. இந்த ரேமுக்கு 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. சோனி குவாட்-பையர் (Sony Quad-Bayer) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 30X சூப்பர் ஜூமிங் கொண்ட 8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவில் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் சாம்சங் சென்சாருடன் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ப்ரோ மோட், அல்ட்ரா எச்டி போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த லாவா அக்னி 3 5ஜி போனில் 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளும்படி 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.
IP64 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், டிஸ்பிளே-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. பிரிஸ்டைன் கிளாஸ் (Pristine Glass), ஹெதர் கிளாஸ் (Heather Glass) கலர்களில் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,998ஆக இருக்கிறது. அமேசானில் நடக்கும் லாவா டேஸ் விற்பனையில் ரூ.3000 கூப்பன் டிஸ்கவுண்ட் போக இப்போது ரூ.17,998 பட்ஜெட்டில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








