தூக்கி வாரும் டிஸ்கவுண்ட்.. ரூ.15,751 தள்ளுபடி.. பிளிப்கார்ட்டில் பிச்சிக்குது ஆர்டர்.. ஐபோன் லாஞ்ச் எஃபெக்ட்!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) மாடல்கள் வரும் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகின்றன. இதை முன்னிட்டு, முந்தைய ஐபோன் மாடல்களுக்கு வரலாறு காணாத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில், ஐபோன் 13 போனுக்கு ரூ.15,751 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 அம்சங்கள் (iPhone 13 Specifications): இந்த போன் 6.1 இன்ச் (2532 × 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர் (HDR) மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் வருகிறது.

செராமிக் சீல்ட் பாதுகாப்பு (Ceramic Shield Protection) வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் ஐஓஎஸ் 15 (iOS 15) கொண்ட எக்ஸா கோர் ஏ15 பயோனிக் 5என்எம் (Hexa Core A15 Bionic 5nm) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு ஆப்பிள் ஏ15 பயோனிக் 4 கோர் ஜிபியு (கோர் Apple A15 Bionic 4 Core GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த ஐபோன் மாடலானது, 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆகிய 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water And Dust Resistant) கொண்டுள்ளது. ஈ-சிம் உள்பட டூயல் சிம் சப்போர்ட் வருகிறது. இந்த போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது.
ஆகவே, 12 எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த கேமராக்களில் சென்சார் ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Sensor Shift Optical Image Stabilisation), ட்ரூ டோன் பிளாஷ் (True Tone Flash) மற்றும் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.
அதேபோல 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ரெடினா பிளாஷ் (Retina Flash), எச்டிஆர் (HDR) வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் மேஜிக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் (MagSafe Wireless Charging) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி வருகிறது.
இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து, 19 மணி நேர வீடியோ பிளேபேக் டைம் கிடைக்கும். மேலும், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைபை 6, என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனின் 128 ஜிபி மாடலின் விலை ரூ.69,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின்பு அவ்வப்போது, விலை குறைக்கப்பட்டது.
ஆனால், இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.12,901 தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதுபோக ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,850 கேஸ்பேக் கொடுக்கப்படுகிறது. அதன்படி மொத்தமாக ரூ.15,751 டிஸ்கவுண்ட்டில் இந்த போனை வாங்கிக்கொள்ள முடியும். அதோடு ரூ.50,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
ஆகவே, இந்த போனை வெறும் ரூ.54,149க்கு வாங்கிக்கொள்ள முடியும். இந்த மாடலானது, பிங்க் (Pink), ப்ளூ (Blue), மிட்நைட் (Midnight) பிளாக், ஸ்டார்லைட் (Starlight) வைட், மற்றும் ரெட் (RED) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்தை முன்னிட்டு, இந்த சலுகை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








