அசூர விற்பனை.. ரூ.7,999 பட்ஜெட்ல 16GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. யாரு விடுவா?
இவ்வளவு கம்மியா எப்படிங்க கிடைக்கும்? என்று மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 2டிபி மெமரி, எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ஏஐ கேமரா போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) போன் விற்பனைக்கு வந்துள்ளது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள் (Infinix Smart 8 Specifications): இந்த வேரியண்ட்டில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. அதோடு 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் 8 மாடலில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி வருகிறது. அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது. எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு (Octa Core MediaTek Helio G36 12nm) ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12என்எம் சிப்செட் கொண்டுள்ளது. ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அதோடு குவாட் எல்இடி ரிங் ஃபிளாஷ் (Quad LED Ring Flash) கொடுக்கப்பட்டுள்ளது.
8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card Slot) வருகிறது. பாட்டம் ஃபயரிங் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் 8 போனில் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. மேலும், வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. இந்த போனானது, 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது.
டைப்-சி சப்போர்ட் வருகிறது. இந்த பேட்டரியோடு 189 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 8.5 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. டிம்பர் பிளாக் (Timber Black), ஷைனி கோல்டு (Shinny Gold), கேலக்ஸி ஒயிட் (Galaxy White) மற்றும் ரெயின்போ ப்ளூ (Rainbow Blue) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.
இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 போனின் விலை ரூ.8,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த தள்ளுபடியை எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ளலாம்.
ஆகவே, இந்த போனை வெறும் ரூ.7,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.8000 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம், 2 டிபி மெமரி சப்போர்ட், 50 எம்பி ஏஐ கேமரா போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், நல்ல டிசைனும் கொண்ட போன் வேண்டுமானால், இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலை தேர்ந்தெடுங்கள்.


Click it and Unblock the Notifications








