Home
Mobile

iPhone 16 அறிமுக தேதியை அறிவித்த வேகத்தில்.. iPhone 15 Plus மீது அபார விலை குறைப்பு!

iPhone 15 Plus Flipkart Offer: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 Series) மாடல்கள் சரியாக எப்போது அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்து.. பழைய ஐபோன் மாடல்கள் மீது திடீர் சலுகைகள் மற்றும் அபார தள்ளுப்படிகள் (Offers and Discounts) அறிவிக்கப்பட்டு வருகிறது. நினைவூட்டும் வண்ணம் புதிய ஐபோன் 16 சீரீஸ் ஆனது வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு தொடங்கும் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

இதற்கிடையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மீது 18% நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) அணுக கிடைக்கிறது. ஐபோன் 15 பிளஸ் மாடலின் அசல் விலை என்ன? 18% டிஸ்கவுண்ட்டிற்கு பிறகான ஆபர் விலை என்ன? புதிய ஐபோன் 16 சீரிஸின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

iPhone 15 Plus மீது அபார விலை குறைப்பு!

ஐபோன் 15 பிளஸ் மாடலின் அசல் விலையும் , ஆபர் விலையும்: கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது ஐபோன் 15 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.89,600 என்கிற விலை நிர்ணயத்தை பெற்று இருந்தது. தற்போது 18% தள்ளுபடிக்கு பிறகு, பிளிப்கார்ட் வழியாக ரூ72,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சுவாரசியமாக ஆப்பிள் இந்தியா வலைத்தளத்தில், இதே மாடல் எந்த விலை குறைப்பும் இல்லாமல் அதே ரூ.89,600 க்கு தான் இன்னமும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஐபோன் 15 பிளஸ் மாடல் மீதான இந்த ஆபர் பிளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அர்த்தம்.

புதிய ஐபோன் 16 சீரிஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? புதிய ஐபோன் 16 சீரீஸின் கீழ் (வழக்கம் போல) மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்: ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max).

புதிய ஐபோன் 16 சீரீஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? ஐபோன் 16 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் $799 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.67,100) அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ஐபோன் 16 பிளஸ் மாடல் ஆனது $899 க்கு (அதாவது தோராயமாக ரூ.75,500) அறிமுகம் செய்யப்படலாம்.

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,099 க்கு (சுமார் ரூ.92,300) என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். ஐபோன் 16 சீரீஸின் ஃபிளாக்ஷிப் மாடலான ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் $1,199 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,00,700) க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட 4 மாடல்களின் இந்திய விலைகளும், அமெரிக்க விலைகளை விட நிச்சயம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 15 ப்ரோ இந்தியாவில் ரூ.1,34,900 க்கும், ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும், ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,900 க்கும் அறிமுகமானது.

புதிய ஐபோன் 16 சீரிஸின் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? ஆப்பிளின் இந்த வெளியீட்டு நிகழ்ச்சி ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற உள்ளது. இது ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதை ஆன்லைன் வழியாக பார்க்க விரும்புபவர்கள், செப்டம்பர் 9, 2024 அன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு ஆப்பிளின் யூட்யூப் சேனலை அணுகலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
18 percent discount on Apple iPhone 15 Plus Ahead new iPhone 16 Launch on Sep 9
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X