Home
Mobile

ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்கள்

By Super
ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட எல்ஜியின் புதிய ஸ்மார்ட்போன்கள்
டெல்லி: ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்கள் மார்க்கெட்டில் மலிந்துவிட்டன. மார்க்கெட்டில் உள்ள 40 சதவீத போன்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டவை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

குறைவான பேட்டரி சக்தியை கிரகிப்பது, எளிதான செயல்பாடுகள் மற்றும் அதிக ஆற்றல் ஆகிய தொழில்நுட்ப வலிமையால் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களுக்கு மார்க்கெட்டில் அப்படியொரு வரவேற்பு இருக்கிறது.

இந்த காரணத்தினாலேயே தனது பெரும்பாலான போன்களில் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் போன்களை எல்ஜி அறிமுகம் செய்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பேர்டு ஆப்பரேட்டிங் சி்ஸ்டம் கொண்ட ஆப்டிமஸ் ப்ரோ மற்றும் ஆப்டிமஸ் நெட் என்ற இரண்டு போன்களை எல்ஜி ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

விரைவில் இந்திய மார்க்கெட்டிற்கு வர இருக்கும் இந்த இரண்டு போன்களிலும் என்னென்ன விஷேசங்கள் இருக்கிறது என்பது பற்றிய ஓர் சிறு அலசல்.

இரண்டில், ஆப்டிமஸ் நெட் முழுக்க முழுக்க டச் ஸ்கிரீன் கொண்டது. ஆப்டிமஸ் ப்ரோ டச் ஸ்கிரீன் மற்றும் கீவெர்ட்டி கீபேடுடன் வந்துள்ளது. ஆப்டிமஸ் ப்ரோவில் 2.8 இஞ்ச் டச் ஸ்கிரீனும், ஆப்டிமஸ் நெட் 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீனும் கொண்டது.

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களை ப்ரோ கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 800 ஜிகாஹெர்ட்ஸ் க்யூவல்காம் பிராசஸர் கொண்டுள்ளது. ப்ரோவில் 256 எம்பி மற்றும் 512 எம்பி என இரண்டு ரேம்கள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு போன்களும் புளூடூத் 3.0 வெர்ஷன் மற்றும் 3ஜி கனெக்ட்டிவிட்டி வசதிகள் இருக்கிறது. 3.0 மெகாபிக்செல் கொண்ட கேமரா விஜிஏ பார்மெட்டில் மட்டும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொடுக்கிறது. இதில், ஆப்டிமஸ் நெட்டில் வை-பை கனெக்ட்டிவிட்டி, ஆப்டிமஸ் யூஐ, 3ஜி இன்டர்நெட் ஆகிய வசதிகள் சற்று கூடுதலாக இருக்கின்றன.

ஆசிய சந்தையில் இரண்டு போன்களும் டியூவல் சிம் கார்டு வசதியுடன் வர இருக்கின்றன. இரண்டு போன்களும் இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் கால் பதிக்க இருக்கின்றன. ஆப்டிமஸ் ப்ரோ ரூ.15,000 விலையிலும், ஆப்டிமஸ் நெட் ரூ.18,000 விலையிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதி்ர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X