14.5 மணிநேர டாக்டைமுடன் புதிய பட்ஜெட் போனை களமிறக்குகிறது எல்ஜி

Posted By: Staff

14.5 மணிநேர டாக்டைமுடன் புதிய பட்ஜெட் போனை களமிறக்குகிறது எல்ஜி
எல்ஜி மொபைல் நிறுவனம் எஸ்-365 என்ற புதிய மொபைலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. எல்ஜி மொபைல்களின் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால் அவற்றின் மலிவான விலையும் மற்றும் நீண்ட நேரம் தாங்கக்கூடிய பேட்டரி பேக்கப்பும் ஆகும்.

இந்திய சந்தையில் மலிவு விலை மொபைல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அதை மனதில் வைத்தே எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி எஸ்-365என்ற புதிய மொபைலை மலிவு விலையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

டூவல் சிம் மொபைல்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையிகின்றன. இதன் காரணமாக, இரண்டு ஜிஎஸ்எம் சிம் கார்டுகளை பொருத்தும் வசதியுடன் எஸ்-365ஐ எல்ஜி அறிமுகப்படுத்துகிறது. டிஎப்டி டிஸ்பிளேயுடன் 2.4 இன்ச் அளவு திரையை கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் சூமுடன் கூடிய 2.0 மெகா பிக்ஸல் கேமராவையும் பெற்றுள்ளது. இந்த 2எம்பி கேமரா 1600 X 1200 பிக்ஸலை சப்போர்ட் செய்யும். எல்ஜி எஸ்-365எல்லா பார்மட்டுகளையும் சப்போர்ட் செய்யக்கூடிய ஆடியோ மற்றும் வீடியோ ரிக்கார்டிங் வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

மேலும் எல்ஜி எஸ்-365சிறந்த ஓப்பரா மினி 5 ப்ரவுசரை கொண்டுள்ளதால் ப்ரவுஸ் செய்வது மிகவும் எளிதாக இருக்கும். 1,000 போன் நம்பர் விபரங்களை பதிவு செய்யும் அளவுக்கு சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.

தவிர, 9.7எம்பி இன்டர்னல் மெமரியைக் கொண்டுள்ள இந்த போனின் சேமிப்பு திறனை 16ஜிபி வரை கூட்டலாம். மேலும் செய்திகள் அனுப்புவதற்கு ஏற்றார்போல் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், இமெய்ல் மற்றும் யாகூ,எம்எஸ்என் போன்ற பார்மட்டுகளை இயக்கும் வசதிகளையும் வழங்குகிறது.

இதனுடைய பேட்டரி 559 மணி நேரம் வரை ஸ்டான்டர்டு பேக்கப்பையும், 14.5 மணி நேரம் தொடர்ந்து பேசக்கூடிய பேக்கப்பையும் கொண்டுள்ளது. மேலும் இந்த மொபைல் பேஸ்புக், ட்விட்டர், நியூஸ்ஹன்ட் என்டிடிவி ஆக்டிவ் போன்ற இணையதள சேவைகளை பெற முடியும்.

மேலும் ஜிபிஆர்எஸ், ப்ளூடூத், வயர்லஸ் ப்ரோட்டோகால் மற்றும் யுஎஸ்பி போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் இந்த போன் ரூ.3,940க்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. உண்மையிலேயே பட்ஜெட் விலையில் சகல வசதிகளுடன் வரும் இந்த மொபைல் வாடிக்கையாளார்களைக் கண்டிப்பாக கவரும் என நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்