Home
Mobile

ஐபோன், ஐபாட்களுக்கான புதிய ஓஎஸ்: அப்டேட் சேவையை துவங்கியது ஆப்பிள்

By Super
ஐபோன், ஐபாட்களுக்கான புதிய ஓஎஸ்: அப்டேட் சேவையை துவங்கியது ஆப்பிள்
புதிய ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பழைய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட்களில் அப்டேட் செய்து கொள்ளும் சேவையை ஆப்பிள் நிறுவனம் துவங்கியுள்ளது.

மின்னணு சாதன தயாரிப்பில் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ஆப்பிள் நிறுவனம் விரைவில் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட உள்ளது.

ஐஓஎஸ்-5 என்ற பெயரில் வரும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் 200 விதமான கூடுதல் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஏற்கனவே ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஐகிளவுட் இணையதளத்திலிருந்து அப்டேட் செய்து கொள்ளும் சேவையை ஆப்பிள் துவங்கியுள்ளது.

ஆப்பிளின் ஐகிளவுட் இணையதள ஸ்டோரிலிருந்து ஐபோன் மற்றும் ஐபேட் மற்றும் ஐபாட்களுக்கு ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எளிதாகப் அப்லோட் செய்து கொள்ள முடியும்.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் ஐபோன், ஐபாட் மற்றும் ஐபேட்களை வைஃபை மூலம் கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுடன் டேட்டா கேபிள்கள் இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் இணைக்க முடியும்.

ஐமெசேஜ், ஆப்பிள் ஐடி கிரெடன்ஷியல், இன்புட் அப்ளிக்கேஷன், ஹிந்தி லேங்குவேஜ் ஆப்ஷன் போன்ற கூடுதல் வசிகள் இதில் உள்ளன. அதோடு வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் தெரிந்து கொள்ள இதில் டிக்ஷனரி ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஐக்ளவுட் சேவையின் மூலம் 5ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் கொடுக்கிறது. ஐடியூன் வைபை சின்க் தொழில் நுட்பம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தப்பட்ட வகையில் உள்ளதால் கூடுதல் வசதிகளை மக்களுக்கு கொடுக்கிறது. இதனால் எளிய முறையில், இருந்த இடத்தில் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

அதோடு இதில் கேமரா அப்ளிக்கேஷன் வசதியும் உள்ளது. இதில் இருக்கின்ற ஹோம் பட்டனை டபுள் க்ளிக் செய்தால் போதும் கேமரா அப்ளிக்கேஷனுக்குள் நேரடியாக செல்ல முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஐஓஎஸ்-5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பயன்பாடுகளால் ஐபோட், ஐபேட், ஐபோன் போன்ற மொபைல்களில் தகவல்களை ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X