Home
Mobile

ஹுவெய் ஐடியோஸ் எக்ஸ்-2 சிறப்பம்சங்கள்

By Super
ஹுவெய் ஐடியோஸ் எக்ஸ்-2 சிறப்பம்சங்கள்
டெல்லி: அழகிய வடிவமைப்புடன் கூடிய குறைந்தவிலை ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதில் எனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை தொடர்ந்து நிருபித்து வருகிறது ஹுவெய். ஐடியோஸ் வரிசையில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வரும் போன்கள் மார்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஐடியோஸ் வரிசையில் ஹுவெய் இறக்கியுள்ள மூன்று ஸ்மார்ட்போன்களி்ல், ஐடியோஸ் எக்ஸ்-2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இன்று காணலாம்.

கன்மெட்டல் பினிஷ் வடிவமைப்புடன் அழுத்தமான கட்டுமானத்துடன் வந்துள்ள இந்த போன் 3.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே கொண்டுள்ளது. நேவிகேஷன் வசதிக்காக, டச் ஸ்கிரீனுக்கு கீழ்பக்கத்தில் டிராக் பேடு கொடுக்கப்பட்டுள்ளது.

இசையை கேட்பதற்கான வால்யூமை கூட்டுவதற்கும், குறைப்பதற்கும் ஏதுவாக போனின் பக்காவாட்டில் வால்யூம் கன்ட்ரோல் பட்டன் பொருத்தப்பட்டுள்ளது.

போனின் மேல்புறத்தில் பவர் பட்டன் மற்றும் 3.5 மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக் ஸ்லாட் உள்ளது.

600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்ட இந்த போன் மற்ற போன்களுடன் ஒப்பிடும்போது செயல்திறனில் அவ்வளவு வேகத்தை காட்டவில்லை.

3.2 மெகாபிக்செல் திறன் கொண்ட கேமரா துல்லியமான படங்களை வழங்குகிறது. 1150 எம்ஏஎச் பேட்டரி போதிய பேக்கப்பை தர மறுக்கிறது என்பதும் குறையாக தெரிகிறது.

மேலும், பழைய வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஐடியோஸ் எக்ஸ்-2 இயங்குகிறது. ஆனால், இந்த போனை ஆன்ட்ராய்டு ப்ரேயோ 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அப்கிரேடு செய்துகொள்ளலாம்.

32 ஜிபி வரை சேமிப்பு திறனை அதிகரித்து கொள்ள முடியும் என்பதோடு, புளூடூத், 3ஜி, வை-பை, ஏ-ஜிபிஎஸ் நவீன இணைப்பு வசதிகளையும், எப்எம் ரேடியோவையும் இந்த போன் பெற்றுள்ளது.

அனைத்து அடிப்படை அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.8,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X