விசாவுடன் இணைந்து பணபரிவர்த்தனை மொபைலை களமிறக்கும் சாம்சங்!

இதற்காக, ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் விசா நிறுவனமும், மொபைல் உலகின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
இந்த வசதியை கொடுக்கும் விதத்தில் என்எஃப்சி சிப்செட் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போனை சாம்சங் விற்பனைக்கு கொண்டு வருகிறது. பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்குண்டான தொகையை கடைகளில் உள்ள பிரத்யேக இயந்திரத்தின் முன்பு சாம்சங் மொபைலை காட்டினாலே போதும். பில் தொகைக்கான பணம் பரிவர்த்தனையாகிவிடும்.
இத்தகைய வசதி கொண்ட ஸ்மார்ட்போனை இந்த ஆண்டின் முடிவிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ சாம்சங் மற்றும் விசா நிறுவனங்கள் இணைந்து வழங்க உள்ளன. மற்றவர்கள் இந்த வசதியினைப் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க இதில் பின் புரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பாவில் உள்ள விசா நிறுவனத்தின் உயர் அதிகாரியான சேன்ட்ரா அல்செட்டா கூறியுள்ளார்.
இந்த வசதிக்காக அந்த ஸ்மார்ட்போனை படா ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டதாக சாம்சங் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக சாம்சங் தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. சாம்சங் நிறுவனம் இந்த வசதியை இங்கிலாந்தில் உள்ள ஆப்ரேட்டர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க உள்ளது.


Click it and Unblock the Notifications