அள்ளி கொடுக்கும் பிளிப்கார்ட்.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. 128GB மெமரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்200இ 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்200இ 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்200இ 5ஜி போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,890 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (vivo Y200e specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (FHD+ AMOLED) பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட் வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேடிங்கையும் (IP54 Rating) பெற்றுள்ளது விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்200இ 5ஜி போனில் 64எம்பி மெயின் கேமரா +2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா வசதி இதில் உள்ளது.மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி (5000mAh battery) மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதியுடன் விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (in-display fingerprint scanner) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன்.
விவோ ஒய்200இ 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி (5G), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








