மிரளவிட வந்துட்டாப்ல.. ரூ.18,999 பட்ஜெட்ல லெதர் பேனல்.. 2.5D டிசைன்.. AMOLED டிஸ்பிளே.. 44W சார்ஜிங் மாடல்!
லெதர் பேக் பேனல், 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, அமோலெட் டிஸ்பிளே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் விவோ ஒய்200இ 5ஜி (Vivo Y200e 5G) போன் சலுகையோடு விற்பனைக்கு வந்துவிட்டது. இதுகுறித்த விவரம் இதோ.
விவோ ஒய்200இ 5ஜி அம்சங்கள் (Vivo Y200e 5G Specifications): இந்த விவோ மாடலில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் (2400 ×1080 பிக்சல்சள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்ட ஈ4 அமோலெட் (E4 AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

50 எம்பி மெயின் கேமரா +2 எம்பி பொக்கெ கேமரா + ஃபிளிக்கர் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. இந்த கேமராவில் நைட் (Night), போர்ட்ராய்டு (Portrait), ப்ரோ (Pro), லைவ் போட்டோ (Live Photo) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல பிளாக் & கோல்டு (Black & Gold), சைபர்பன்க் (Cyberpuck), கிரீன் ஆரஞ்ச் (Green Orange), ப்ளூ ஐஸ் (Blue Ice) போன்ற நைட் பில்டர்கள் (Night Filters) வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) சப்போர்ட் வருகிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm Mobile Platform) சிப் வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்டுள்ளது. இந்த விவோ ஒய்200இ 5ஜி போனில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி டைனாமிக் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் (8 ஜிபி டைனாமிக் ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம். ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் ஹைபிரிட் டூயல் சிம் (Hybrid Dual SIM) சிலாட் கொண்டிருக்கிறது.

இந்த விவோ போனில் 5000mAh பேட்டரியானது, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட்டுடன் வருகிறது. அதேபோல டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கொண்டிருக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டூயஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) வருகின்றன.
IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant) கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கொண்டுள்ளது. டியூரபிள் ஈகோ-ஃபைபர் லெதர் ஃபினிஷிங் (Durable Eco-fiber Leather Finish) கொண்ட சஃப்ரான் டிலைட் (Saffron Delight) மற்றும் பிளாக் டயமன்ட் (Black Diamond) ஆகிய கலர்கள் கொண்டிருக்கிறது.
இந்த விவோ ஒய்200இ 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 20,999ஆகவும் இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ரூ.1000 உடனடி தள்ளுபடியுடன் விற்பனை தொடங்கி விட்டது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல், ரூ.18,999 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் வாங்கலாம். இதே விலை மற்றும் ரூ.1000 தள்ளுபடியுடன் பிளிப்கார்ட் தளத்திலும் இந்த விவோ போன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications