அறக்க பறக்க ஆர்டர்.. ரூ.2500 கட்.. 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த 3டி கர்வ்ட் டிஸ்பிளே பிரியர்களும் அறக்க பறக்க ஆர்டர் செய்யும் விதமாக விவோ ஒய்200 ப்ரோ 5ஜி (Vivo Y200 Pro 5G) போனானது, மிரளவிடும் டிஸ்கவுண்ட்டில் விற்பனை செய்யப்படுகிறது. 3டி டிஸ்பிளே மட்டுமல்லாமல், வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு பீச்சர் கொண்ட ஆன்டி-ஷேக் கேமரா, அட்ரினோ கிராபிக்ஸ், 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, 5000mAh பேட்டரி போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த விவோ போன் குறித்த முழு விவரம் இதோ.
விவோ ஒய்200 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Vivo Y200 Pro 5G Specifications): இந்த விவோவில் 64 எம்பி ஆன்டி-ஷேக் கேமரா (Anti-Shake Camera) + 2 எம்பி போர்ட்ராய்டு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 2X போர்ட்ராய்டு போகல் லென்த் (Portrait Focal Length) வருகிறது.

நைட் போர்ட்ராய்டு (Night Portrait), வெட்டிங் ஸ்டைல் போர்ட்ராய்டு (Wedding Style Portrait) பீச்சர்கள் வருகின்றன. சூப்பர் மூன் மோட் (Super Moon Mode) வருகிறது. ஆகவே, 10x டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். நைட் டைம் கிளியர் போர்ட்ராய்டு அவுட்புட் கொடுக்கும் சூப்பர் நைட் மோட் (Super Night Mode) வருகிறது.
மேலும், டூயல் வியூ வீடியோ (Dual-View Video), விலாக் மூவி கிரியேட்டர் (Vlog Movie Creator) போன்ற பீச்சர்களும் வருகின்றன. இதுவொரு ஓஐஎஸ் கேமரா மாடலாகும். இந்த விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. ஆகவே, இந்திய கேமரா பிரியர்களுக்கான பட்ஜெட் மாடலாக இந்த போனை ஆப்ஷனில் எடுக்கலாம்.
இந்த விவோவில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே வருகிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், பி3 கலர் காமட் மற்றும் 388 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே வருவதால், அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 7.49 மிமீ தடிமன் மட்டுமே வருகிறது.

இந்த ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் மற்றும் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் உள்ளது. மேலும், ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) வருகிறது.
இந்த விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போனில் ஒரே வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) ஸ்ட்ரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
அண்டர்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Fingerprint Sensor) வருகிறது. இந்த விவோவில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் வருகிறது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டுள்ளது.
இந்த விவோ ஒய்200 ப்ரோ 5ஜி போனில் சில்க் கிரீன் (Silk Green) மற்றும் சில்க் பிளாக் (Silk Black) ஆகிய 2 கலர்கள் வருகின்றன. இந்த போன் அறிமுகமானபோது, இதன் விலை ரூ.24,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,500 உடனடி தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








