வெச்சி செஞ்சிட்டாங்க.. 18,249 விலை குறைப்பு.. 200MP கேமரா.. 100x ஜூமிங்.. QHD+ டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனை சரியான டிஸ்கவுண்ட்டில் வாங்க திட்டமிட்ட பிரியர்களுக்கு அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Freedom Festival Sale) சரியான நேரம் வந்துவிட்டது. குவாட் எச்டி அமோலெட் டிஸ்பிளே, 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 100எக்ஸ் ஸ்பேஸ் ஜூமிங், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவின் விற்பனை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.1,29,999 பட்ஜெட்டில் வெளியான இந்த அல்ட்ரா மாடலானது, இப்போது வெறும் ரூ.1,11,750 பட்ஜெட்டில் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட இந்த போனில் டிஸ்பிளே, சிப்செட், கேமரா மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்கள் வேறு எந்த போனிலும் இல்லாதபடி மூக்கில் விரல் வைக்கும்படி வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification): இந்த சாம்சங்கில் 6.8 இன்ச் (3120 x 1440 பிக்சல்கள்) குவாட் எச்டிபிளஸ் (Quad HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இன்பினிட்டி-ஓ-எட்ஜ் டைனாமிக் அமோலெட் (Infinity-O-Edge Dynamic AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.
டிஸ்பிளேவுக்கு கொரில்லா ஆர்மோர் புரொடெக்சன் (Gorilla Armor Protection) வருகிறது. கேமராவை பற்றி சொல்ல வேண்டியது கிடையாது. உலகில் இருக்கும் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்களில் ஐபோனுக்கு துளியும் குறைவில்லாமல் இருக்கிறது. ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா + 10 எம்பி டெலிபோட்டோ கேமரா வருகிறது.
மேலும், 10 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. டெலிபோட்டோவில் 3x ஜூமிங் வருகிறது. அதேபோல பெரிஸ்கோப்பில் 5x ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 100x ஸ்பேஸ் ஜூமிங் வருகிறது. இதுபோக 4K மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது.
லேசர் ஆட்டோபோகஸ் (Laser Autofocus) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ராவில் 12 எம்பி செல்பீ கேமரா வருகிறது. பிரீமியம் போன்களில் வரும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 6.1 (One UI 6.1) வருகிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.
7 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் கொண்டிருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
ஏஐ சப்போர்ட் உடன் லைவ் டிரான்ஸ்லேஷன், சாட் அசிஸ்டன்ட், நோட் அசிஸ்டன்ட், சர்க்கிள் டூ சர்ச்ச் போன்ற பீச்சர்களை கொண்டிருக்கிறது. 45W சார்ஜிங், கியூஐ சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. டைட்டானியம் கிரே, டைட்டானியம் பிளாக், டைட்டானியம் வயலட் மற்றும் டைட்டானியம் எல்லோ கலர்களில் வருகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.ரூ.1,29,999 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசானில் ரூ.1,12,500 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, வெறும் ரூ.1,11,750 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications