Home
Mobile

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. 50 எம்பி கேமரா.. 25W சார்ஜிங்.. ஆஃபரில் தரமான Samsung 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி (Samsung Galaxy A16 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் தரமான Samsung 5ஜி போன்..

சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A16 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) இன்பினிட்டி-யு சூப்பர் அமோலெட் (Infinity-U Super AMOLED) டிஸ்பிளே கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 × 2340 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm)சிப்செட் உடன் இந்த கேலக்ஸி ஏ16 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஒன் யுஐ 6.0 (One UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.

மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU)கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். மேலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி மாடல். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா (ஆட்டோபோகஸ்) + 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி. செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13 எம்பி செல்பீ ஷூட்டர்
கிடைக்கிறது. அதேபோல் இந்த மெயின் கேமராவில் 10எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது.

IP54 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போன். மேலும் 5000mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. பின்பு பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ16 5ஜி போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speakers) போன்ற பல வசதிகள் உள்ளன. 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
17 Percent Discount on Samsung Galaxy A16 5G with 6GB Ram in Flipkart month end mobile festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X