ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 50எம்பி கேமரா.. 25W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஆஃபரில் Samsung போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் எதிர்பார்த்த சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ06 அம்சங்கள் (Samsung Galaxy A06 specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 12என்எம் (Octa Core MediaTek Helio G85 12nm) சிப்செட் உடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி-ஜி52 2EEMC2 ஜிபியு (ARM Mali-G52 2EEMC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே இந்த போனில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதேபோல் One UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டு சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக 5000mAh பேட்டரியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ06 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 196 கிராம் ஆகும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








