பிளிப்கார்ட் மிரளுது.. வெறும் ரூ.25999 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிளிப்கார்ட்டில் 200எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 120W சார்ஜிங், 4980mAh பேட்டரி போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro Plus) போன் பட்டையை கிளப்பும் தள்ளுபடியில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 12 Pro Plus Specifications): இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. அதேபோல டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட், டால்பி விஷன் (Dolby Vision), மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. கேமிங் பிரியர்களுக்கான மாலி- ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
அதேபோல கேமரா பிரியர்களுக்கென பக்காவான சென்சார்களுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்ட ஓஐஎஸ் (OIS) மாடல் வருகிறது. ஆகவே, 200 எம்பி மெயின் கேமரா சாம்சங் எச்எம்எக்ஸ் (Samsung HMX) சென்சாருடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஃபிலிம் பிரேம் (Film Frame), எச்டிஆர் (HDR) போன்ற மோட்கள் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. அதேபோல சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது.
இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் IP53 தர டஸ்ட் மற்றும் பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (audio jack) மற்றும் சூப்பர் லைனர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Super-linear stereo speaker) கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 5ஜி, டூயல் 4ஜி, வை-பை 6, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை வருகின்றன.
இந்த மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4980mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் வருகிறது. அதோடு 208 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த போனில் ஆர்க்டிக் வைட் (Arctic White), ஐஸ்பெர்க் ப்ளூ (Iceberg Blue) மற்றும் அப்சிடியன் பிளாக் (Obsidian Black) ஆகிய மூன்று கலர்கள் கிடைக்கின்றன.

இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை அனைத்து வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதோடு ரூ.12,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த மாடலை ரூ.24,999க்கு வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications